சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..???

சாதித்த அமெரிக்கா..!!! என்ன சாதனை..???

அமெரிக்காவில் நார்த் டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து புது முயற்சி மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வகங்களில் ஸ்டெம் செல்கள் பயன்படுத்தி செயற்கையாக இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

16 வது நாளில் ஆய்வகங்களில் வெற்றிகரமாக செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது.

இந்த செயற்கை இதயம் மனித இதயத்தை போல துடிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை முன்னணி மருத்துவ இதழ்களில் ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

இதயம் செயற்கையாக உருவாக்கியது போல செயற்கை கல்லீரலையும், செயற்கை ரத்த நாளங்களையும் உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற இயலும் என இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK