இந்த வீடியோ பதிவில், ஒரு கருப்பு நிற SUV வாகனமானது சாலையோரமாக நின்று பேசிக் கண்டிருந்த ஆண் பெண் மீது மோதியதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்த காட்சி பதிவாகியுள்ளது. விழுந்து அந்த நபர் எழுந்து நின்று வாகனம் ஒருவர் மீது மோதியதை குறிக்கும் வகையில் சைகையில் கூறியுள்ளார். பெண்ணிற்கு காயம் ஏற்பட்டது. மேலும் அவரால் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு கார் மோதியுள்ளது.
இந்த காணொளி பதிவானது 339,000 முறைக்கும் மேலாக பார்க்கப்பட்டு 210 பேருக்கும் அதிகமானோர் கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர்.
இந்த கருத்துக்கு பதிவில் அந்த வாகனம் ஏன் நடைபாதைக்கு மிக அருகில் ஓட்டப்பட்டது என்று இணையவாசிகள் பல கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் அந்த தம்பதியினர் சரியாக சலையோரத்தின் உடைய மஞ்சள் கோட்டின் மீது நின்று கொண்டிருந்தனர் மாறாக தவறுதலாக கார் ஓட்டுநர் அவர்கள் மீது தவறாக மோதியது ஏன் என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்த காரணத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.