சிங்பாஸ் கணக்குகளை கைப்பற்ற முயற்சி..!! விசாரணையில் பரபரப்பு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிங்பாஸ் ஐடியை தவறாக பயன்படுத்தி முகவரிகளை மாற்றியதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் மீது இன்று(09.12.25)நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வழக்கில், குற்றம் சாட்டப்படும் 10 நபர்களும் 17 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள்.
ஐந்து பேர் ICA அதிகாரிகளால் முகவரி மாற்றங்களை தவறாகப் புகாரளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 14 பேருக்கு தொடர்பு உள்ளது. ஜனவரியில் நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதில் மூன்று பேர் முக்கியமாக செயல்பட்டதாகவும் அவர்கள் மீது மீண்டும் குற்ற சாட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 பேர் கூட்டாளிகள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
30 வயதுடைய ஒருவர் இதற்கு மூளையாக செயல்பட்டதாகவும், கடந்த ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் அவர் மீது 42 கூடுதல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் போலீசார் கூறினர்.
வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களுக்கு 24 மாத நிபந்தனை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
விசாரணையில், ஒரு குற்றவியல் குழு ICA அனுப்பிய தனிப்பட்ட அடையாள எண் (PIN) அஞ்சலை இடைமறித்து,பாதிக்கப்பட்டவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிகளை மாற்ற முயற்சி செய்ததாகவும், சிங்பாஸ் கணக்குகளை கையகப்படுத்த முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.