வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி அன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.தேர்தல் ஆணையம் ஆனது தேர்தலுக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் சட்ட-ஒழுங்கு நிலைமையானது தமிழ்நாட்டில் மிக மோசமாக இருக்கும் காரணத்தினால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது மனுவில் கூறியுள்ளார்.
அண்மையில் சென்னை எம்ஜிஆர் நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினருடன் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் சட்ட-ஒழுங்கு முறைக் கேட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக்கூறி கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
மேலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அழிந்து வருவதாகவும், தமிழகத்தில் கடைசி 75 நாட்களில் 234 கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.