சிங்கப்பூருக்கு PCM PERMIT இல் செல்லலாமா..??

சிங்கப்பூருக்கு PCM PERMIT இல் செல்லலாமா..??

பலரும் நம்மிடம் கேட்கும் கேள்வி சிங்கப்பூர் வேலைக்கு pcm பார்மெட்டில் செல்லலாமா?

சிங்கப்பூர் செல்வதற்கு பல பர்மிட்டுகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த PCM பர்மிட். இந்த பதிவில் இதில் செல்வதால் உள்ள நன்மை தீமைகளை பற்றி பார்க்கலாம்.

சிங்கப்பூர் பற்றிய அனைத்து தகவல்களையும் தினந்தோறும் நாங்கள் பதிவிட்டு வருகிறோம். சிங்கப்பூருடைய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.


Pcm பர்மிட் என்பது பெரிதாக படிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த பர்மிட் என்றே சொல்லலாம்.

இதில் சிங்கப்பூர் செல்வது மிகவும் எளிது. அதேபோல் இதற்கு அனுபவமும் பெரிதாக தேவைப்படாது.

இந்த பர்மீட்டில் நீங்கள் செல்வதற்கு கட்டும் தொகையும் சற்று குறைவாகவே இருக்கும்.

அதேபோல் இந்த பர்மீட்டில் நீங்கள் சென்று அதன் பிறகு அங்கு ரெஸ்ட் அடித்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு கம்பெனியின் கடிதம் தேவைப்படும்.

இந்த பர்மீட்டில் நீங்கள் செல்லும் பொழுது வேலை சற்று கடினமாக இருக்கும். அதிகபட்சம் ஜெனரல் ஒர்க்காகவே நீங்கள் செய்ய வேண்டியது இருக்கும்.

இதற்கான சம்பளமும் சற்று குறைவு தான். இதில் குறைந்தபட்சம் 18 சிங்கப்பூர் வெள்ளியிலிருந்து 20 அல்லது 22 சிங்கப்பூர் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு தருவார்கள்.

இதில் நீங்கள் தங்கும் இடத்திற்கு ஒரு சில கம்பெனிகளில் இருந்து பணம் பிடித்துக் கொள்வார்கள். நீங்கள் அங்கிருந்து தாய் நாட்டிற்கு மாதம் அனுப்பும் தொகை சற்று குறைவாகவே இருக்கும்.

நீங்கள் முதலில் இந்த பர்மீட்டில் சென்று அதன் பிறகு உங்கள் கம்பெனியின் தயவோடு டெஸ்ட் அடிக்க முடிந்தால், இந்த பர்மிட் ஒரு சிறந்த பர்மிட். அதேபோல் உங்களுக்கு பெரிதாக வேற எந்த வேலையும் தெரியாது என்ற பொழுது நீங்கள் பெரிதாக படிக்கவில்லை என்ற பொழுது இந்த பர்மீட்டில் செல்வது சிறந்தது.

உங்களுக்கு Shipyard பர்மிட்டில் செல்லும் வாய்ப்பு அல்லது pcm பர்மீட்டில் செல்லும் வாய்ப்பு, இது இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் PCM – ஐ தேர்வு செய்யுங்கள்.

இதில் கிடைக்கும் சலுகைகள் கம்பெனியை பொருத்து மாறுபடும்.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளவும்.
☎️8124738010
☎️7550207508

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK