சிங்கப்பூரில் இந்திய Driving Licence பயன்படுத்த முடியுமா..?? முக்கிய தகவல்கள்..!!

சிங்கப்பூரில் இந்திய Driving Licence பயன்படுத்த முடியுமா..?? முக்கிய தகவல்கள்..!!

சிங்கப்பூரில் Commercial Driver ஆக வேலை செய்ய விரும்புபவர்கள், இந்திய Driving Licence மட்டும் வைத்து நேரடியாக பணியில் சேர முடியாது.

அதற்காக முதலில் செல்லுபடியாகும் Work Permit, S Pass அல்லது Employment Pass பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு Basic Theory Test (BTT) தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய ஓட்டுநர் உரிமத்தை Singapore Driving Licence-ஆக மாற்ற வேண்டும்.

வேலை வகையைப் பொறுத்து Class 3, Class 4 அல்லது Class 5 ஓட்டுநர் உரிமம் அவசியமாக இருக்கலாம். விண்ணப்பத்தின் போது Passport, FIN Card, Work Pass உள்ளிட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், சில நிறுவனங்கள் 2 முதல் 3 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம், மருத்துவத் தகுதிச் சான்றிதழ் மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூரில் டிரைவர் பணிகளில் பொதுவாக S$2,500 முதல் S$4,500 வரை சம்பளம் வழங்கப்படலாம். பணியின் தன்மை மற்றும் ஓவர்டைம், அலவன்ஸ்களைப் பொறுத்து வருமானம் மேலும் அதிகரிக்கும்.

எனவே, இந்திய Driving Licence மட்டும் இருந்தால் சிங்கப்பூரில் Commercial Driver ஆக வேலை செய்ய முடியாது. தேவையான Singapore Driving Licence மற்றும் பிற தகுதிகளைப் பெற்ற பிறகே அந்தப் பணியில் சேர முடியும்.

இது போன்ற பயனுள்ள தகவல்களுடன் தெரிந்து கொள்ள நமது இணையதள பக்கமான sgtamilan.com இல் இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK