சிங்கப்பூரில் நேற்று (மார்ச் 10) மாலை துவாஸை நோக்கி செல்லும் கிரான்ஜி நெடுஞ்சாலையில் சோவா சூ காங் வெளியேறும் இடத்திற்கு முன்பாக ஒரு லாரி இழுவை லாரியுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவ்வப்போது சில விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
லாரியில் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்ட 9 பேரும், 39 வயதுடைய ஒரு ஓட்டுநரும் இருந்துள்ளனர். அனைவருக்கும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஏழு பேர் இங் டெங் ஃபோன் பொது மருத்துவமனைக்கும், மீதமுள்ள மூன்று பேர் கூட டெக் புவாட் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து சிங்கப்பூர் காவல் துறையினருக்கு புகார் கிடைத்ததை அடுத்த தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.