சிங்கப்பூரில் கலக்கும் கேட்டரிங் சேவைகள்..!! காரணம் என்ன தெரியுமா.???
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உணவக வருவாய் குறைந்தாலும்,கேட்டரிங் சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அலுவலக நிகழ்வுகள், திருமணங்கள், குடும்ப விருந்துகள், சமூக கூட்டங்கள் என எல்லாவற்றிலும் “வெளியில் சாப்பிடுவதைவிட வீட்டிலோ அலுவலகத்திலோ விருந்து நடத்துவோம்” என்ற போக்கு பெருகி வருகிறது. இதனால் பல உணவகங்கள் தங்கள் வணிகத்தை மாற்றி, கேட்டரிங் துறைக்கு மாறியுள்ளது.
புள்ளியியல் அலுவலகத்தின் தரவின்படி, இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் உணவக வருவாய் 6% குறைந்த நிலையில், கேட்டரிங் விற்பனை 17.8% உயர்ந்துள்ளது.
யும் சா மற்றும் ஹலோ அரிகாடோ போன்ற பிரபல உணவகங்கள், வாடிக்கையாளர்கள் குறைவதை எதிர்கொண்டு, கேட்டரிங் சேவைக்கு மாறியுள்ளன. யும் சா விற்பனையில் 5% கேட்டரிங்கிலிருந்து வருகிறது.
அதேபோல, “ஹலோ அரிகாடோ” காபி சங்கிலியும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கேட்டரிங் சேவையில் இணைந்தது.ஹலோ அரிகாடோவின் கேட்டரிங் வருவாயும் விரைவில் 15% வரை உயரும் என நிறுவனர் கூறியுள்ளார்.
ரஸல், லாவிஷ் டைன், சில்லி அபி போன்ற நிறுவனங்கள் திருமணங்கள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்வுகளால் 10% முதல் 30% வரை வளர்ச்சி கண்டுள்ளன.
ஆனால் உணவு, தொழிலாளர் செலவுகள் அதிகரிப்பதும், பொருளாதார மந்தநிலை ஆபத்தும் நீண்டகால சவாலாக இருக்கும் என்று வணிக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஜெங் வெய், தொழில்முறை கேட்டரிங் சங்கத்தின் செயலாளர் கூறியதாவது, பெரிய நிறுவனங்கள் நன்மை அடைகின்றன. ஆனால் சிறு வணிகங்கள் இன்னும் போராடி வருவதாக கூறினார்.
ஆகஸ்டில் வளர்ச்சி விகிதம் 4.8% ஆகக் குறைந்திருப்பது இதற்குச் சான்றாகும் மொத்தத்தில், சிங்கப்பூரில் கேட்டரிங் துறை தாறுமாறாக உயர்ந்தாலும்,செலவு உயர்வு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நீண்டகால சவால்கள் நீடிக்கக்கூடும் என தொழில்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.