சிங்கப்பூரில் குழந்தை துன்புறுத்தல் அதிகரிப்பு..!!

சிங்கப்பூரில் குழந்தை துன்புறுத்தல் அதிகரிப்பு..!!

சிங்கப்பூரில் சமீபத்தில் 4 வயது சிறுமி ஜியாங் துன்புறுத்தி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பிலான மறு ஆய்வு அறிக்கை அக்டோபர் 23 அன்று வெளியிடப்பட்டது.

இதனால் அதிகாரிகளால் கையாளப்படும் அதிக ஆபத்து நிறைந்த குழந்தை துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருவதாக சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று (10/12/2025) சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் குடும்ப வன்முறை தொடர்பிலான இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு குடும்ப வன்முறை தொடர்பிலான வழக்குகளின் மதிப்பீடுகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை இரண்டு நிலைகளாக சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது.
அடுக்கு 1 வழக்கு: இந்த வழக்கானது குறைந்த முதல் நடுத்தர ஆபத்து

அடுக்கு 2 வழக்கு: அதிக ஆபத்து நிறைந்த வழக்கு

இந்த வழக்குகளானது கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது அக்டோபர் மாதத்தில் அதிக வழக்குகள் குழந்தை துன்புறுத்தல் தொடர்பிலானவை அதிகரித்துள்ளது.

வாழ்க்கைத் துணைகளை துன்புறுத்தும் வழக்குகளும் தற்போது அதிகரித்து உள்ளது. மற்றும் முதியோர்களையும் புறக்கணிக்கும் வழக்குகளும் அதிகரித்து வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK