ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..??

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரயில்வே பாதை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த நான்கு சீன ஆண்கள்,போலீசாரால் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் தெரிவித்ததாவது, 36 முதல் 41 வயதுக்குட்பட்ட இவர்கள், ஆகஸ்ட் 8 அன்று மலேசியாவிலிருந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளனர்.

சம்பவ நாளிலேயே ரயில் பாதை மற்றும் புக்கிட் திமா சாலை அருகில் நடத்திய அமலாக்க நடவடிக்கையின் போது, இவர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்தது என தெரிவித்தனர்.

கிளெமென்டி காவல் நிலையம், சிறப்பு செயல்பாட்டு அணி, ட்ரோன் கட்டளை உள்ளிட்ட பல பிரிவுகள் இணைந்து நடத்திய தேடுதலில்,ரயில் பாதை அருகே 2 நபர், கிளெமென்டி மாலில் 1 நபர்,கேலாங்கில் உள்ள ஹோட்டலில் 1 ஒரு நபர் என கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்களிடமிருந்து ஸ்க்ரூடிரைவர்கள், ரெஞ்சுகள், துணிகள் மற்றும் S$400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் தெரிவித்ததாவது, ஏப்ரல் மாதத்திலிருந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் மூன்று முறை திருட்டு சம்பந்தப்பட்ட புகார்கள் வந்துள்ளன.

இதில் இரண்டு வழக்குகளில் மொத்தம் S$60,000 மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன.

நான்கு பேரும் திருட்டு கருவிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று (10.08.25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேற்கூறிய இடங்களில் பத்து சிசிடிவி கேமராக்களை போலீசார் நிறுவியுள்ளதாக அவர் கூறினார்.குற்றங்களைச் செய்ய நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் சந்தேக நபர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்வார்கள்.மேலும் சட்டத்தின்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan