ஊழல் வழக்கில் சிக்கிய சீனப்பெண்..!! 5 ஆண்டுகள் சிறை தண்டனையா??
சாங்கி விமான நிலையத்திற்குள் நுழைய குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் அதிகாரிகளுக்கு 38 வயது சீனப் பெண் காங் ஜென்னி, சென்ற ஆண்டு (2025) டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை 5:08 மணியளவில் விமான நிலையத்தின் முனையம் 4 இல் உள்ளே செல்ல அனுமதிக்க அமலாக்க அதிகாரிகளுக்கு $100 லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.
ஆனை அதிகாரிகள் வாங்க மறுத்ததை அடுத்த வழக்கு ஊழல் நடைமுறைகள் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. மேலும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6(b) இன் கீழ் சீனப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த குற்றத்திற்காக இன்று (மார்ச் 10) சீனப்பெண் கைது செய்யப்பட்டார்.
வழக்க விசாரணைக்கு பிறகு, குற்றம் சுமத்தப்பட்ட சீனப் பெண்ணுக்கு $5000 ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் விசாரணைக்காக ஏப்ரல் 7ஆம் தேதிக்கு இந்த வழக்கானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த புலனாய்வுத்துறை கூறியது: ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6(b) ஐ மேரிய குற்றத்திற்காக சிங்கப்பூர் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டுள்ளது என்பதை ஊழல் நடைமுறைகள் புலன் ஆய்வுத்துறை கூறியுள்ளது.
மேலும் இந்த பிரிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது $100,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.