சிங்கப்பூரில் குறைய தொடங்கிய ஊழல் புகார்கள்..!!

சிங்கப்பூரில் குறைய தொடங்கிய ஊழல் புகார்கள்..!!

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு 2025″ ஆம் ஆண்டு வெளியிட்ட ஊழல் குறியீட்டென் பட்டியலில் இடம் பெற்றுள்ள 182 நாடுகளில் மிக குறைவாக ஊழல் உள்ள மூன்றாவது நாடாக சிங்கப்பூர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதனோடு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஊழல் குறைந்த நாடு எனும் பெருமையை சிங்கப்பூர் இடம் பிடித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2025 ஆம் ஆண்டில் மிகக் குறைவான லஞ்ச ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளன. மொத்தமாக 160 லஞ்ச ஊழல் புகார்கள் பதிவாகி இருந்தன. இந்த எண்ணிக்கை 2024 இல் பதிவான 177 புகார்களை காட்டிலும் 10 விழுக்காடு குறைந்து இருக்கிறது. 2021ல் இதன் எண்ணிக்கையானது 249 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஊழல் புலனாய்வு பிரிவு இன்று (ஏப்ரல் 28) இந்த விவரங்கள் அனைத்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பதிவாகியுள்ள புகார்களில் பெரும்பாலானவை உற்பத்தி, போக்குவரத்து, கிடங்கு வசதி மற்றும் கட்டுமான துறைகளைச் சேர்ந்தவை ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் துறைகளில் பெரும்பாலாக லஞ்சம் ஊழல் நிலவுகிறது என லஞ்ச ஊழல் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு 2025 பதிவானவற்றில் 68 புகார்கள் வழக்குகளாக மாற்றம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளன. மேலும் கிடைக்கப்பெறும் புகார்களின் தகவல்கள் அனைத்தும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்ற பட்சத்தில் அதை வழக்குகளாக மாறும் என்று அந்த பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 160 புகார்களில் 56 பெயர் குறிப்பிட விரும்பாத நபர்களிடமிருந்து வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட்டு இருந்தாலும் இல்லையென்றாலும் அனைத்து புகார்களும் தீவிரமாக பரிசீலனை செய்யப்படும் என்று புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்ட பெரும்பாலான புகார்கள் தனியார் துறை தொடர்பானவை.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையில் 90 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

தனியார் துறை – 84 பேர்
பொதுச் சேவைத்துறை – 6 பேர்

அந்த ஆறு பேர் தேசிய சுற்றுப்புற அமைப்பு, சிங்கப்பூர் ஆயுதப்படை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை, சிங்கப்பூர் சிறைச்சேவை, செயிண்ட் அந்தோணி உயர்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் கல்வி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK