சிங்கப்பூரின் “ஷூ டாக்டர்” என அறியப்படும் காலணி வடிவமைப்பாளர் யார் தெரியுமா...??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் “ஷூ டாக்டர்” என்று அழைக்கப்படும் லீ ஜியோங்சியாங் (73) கடந்த 43 ஆண்டுகளாக தனிப்பயனாக்கப்பட்ட காலணிகளை வடிவமைத்து, நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் பாத பிரச்சனைகளை தீர்த்து வந்துள்ளார்.
சிறந்த கைவினைத்திறன் மற்றும் பாத மருத்துவ அறிவுடன், இவர் வெறும் ஷூ தயாரிப்பாளராக இல்லாமல் ஒரு கால் நல மருத்துவ ஆலோசகராகவும் திகழ்கிறார்.
இவர் தனது தந்தை லீ சியுங் சியாஙிடம் இருந்து இந்த கலையை கற்றார்.
பக்கவாதம், உறுப்பு நீக்கம், போலியோ போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கேற்ற ஷூக்களை வடிவமைக்கும் இவர், வாடிக்கையாளரின் காலில் பார்வையிலேயே பிரச்சனை கண்டறிந்து சரியான காலணிகளை வழங்குகிறார்.
வாடிக்கையாளர்களால் லீ ஜியோங்சியாங் “ஷூ டாக்டர்” என அன்புடன் அழைக்கப்படுகிறார்.
லீ குவான் யூவின் காலணிகளை உருவாக்க ஜியோங்சியாங் ஜனாதிபதி மாளிகைக்கே சென்று சேவை செய்தார். சிறந்த காலணிகளை உருவாக்க சுமார் ஒரு மாதம் வரை ஆகுமாம்.பிரதமர் ஜியாங் ஜெமினுக்கு மட்டும் 20 வருடங்களில் 16 ஜோடி காலணிகள் தயாரித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் வேண்டுகோளுக்கேற்ப தற்போது வரை கடையைத் தொடருகிறார்.
ஜாலான் குகோவில் அமைந்துள்ள அவரது கடை, தற்போது பழைய வாடிக்கையாளர்களின் ஆர்டர்களையே ஏற்கிறது.ஓய்வு பெற திட்டமிட்டுள்ள ஜியோங்சியாங், தனது கைவினைப் பொருட்கள் மற்றும் லீ குவான் யூவின் ஷூ அச்சுகளை எதிர்காலத்தில் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க விரும்புகிறார்.