காவல்துறை இதுகுறித்து நேற்று (12 ஆம் தேதி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் whatsapp செயலியை நீண்ட நாளாக வெரிஃபிகேஷன் செய்யப்படாமல் வைத்திருந்தீர்கள் எனில் உடனேயே இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் whatsapp-ஐ வெரிஃபை செய்து கொள்ளுங்கள் என மோசடி கும்பல்கள் மூலமாக ஒரு செய்தி வர துவங்கும்.
பிறகு அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்தால் போலியான whatsapp வலை பக்கத்திற்கு நீங்கள் சென்று அங்கு உங்கள் வங்கி கணக்குகளை சரிபார்க்க சொல்லி அதன் மூலமாக உங்களுடைய வங்கி விவரங்களை திருடும் புதிய யுக்தியை மோசடி கும்பல்கள் செய்து வருகின்றனர் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யார் கவனமாக இருக்க வேண்டும்? முக்கியமாக whatsapp செயலியில் வாங்கி கணக்கை இணைத்து வைத்திருப்பவர்கள் இதுபோன்ற மோசடி கும்பல்களின் பிடியில் சிக்கிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.