சிங்கப்பூரில் மீண்டும் மின்சிகரெட் அலர்ட்..!! சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு…!!!

சிங்கப்பூரில் மீண்டும் மின்சிகரெட் அலர்ட்..!! சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டுகள் மீண்டும் பரவல் அடைவதுடன், அதில் போதைப்பொருளான எடோமிடேட் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை, சுமார் $41 மில்லியன் மதிப்புடைய மின்சிகரெட்டுகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 28 எடோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனால் சுகாதார அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து பரிசீலிக்கின்றன.

ஏற்கனவே 2018ஆம் ஆண்டு மின்சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், அவை சட்டவிரோதமாக விற்கப்படுவது தொடர்கிறது.

ஏப்ரலில் அரசு நீதிமன்றங்களுக்கு வெளியே 13 வயது சிறுமி ஒருவர் மின்சிகரெட்டை பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரது வீட்டை சோதனையிட்டதில்
‘கேபாட்’ எனப்படும் எடோமிடேட் கலந்த சாதனம் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின.

இதனால் சிங்கப்பூர் அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புகளை மேலும் தீவிரப்படுத்த உள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan