இனி ஷாப்பிங் தரும் இரட்டிப்பு ஆனந்தம்…!!!FairPrice சிறப்பு தள்ளுபடி..!!

இனி ஷாப்பிங் தரும் இரட்டிப்பு ஆனந்தம்...!!!FairPrice சிறப்பு தள்ளுபடி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று(02.09.25) முதல் டிசம்பர் 31 வரை, நீலம் மற்றும் ஆரஞ்சு CHAS அட்டைதாரர்கள் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் FairPrice பல்பொருள் அங்காடிகள் மற்றும் Jen Yi Pharmacy-யில் ஷாப்பிங் செய்யும்போது இருமடங்கு தள்ளுபடி அல்லது 6% சலுகையை பெறலாம்.

இதுகுறித்து FairPrice குழுமம் தெரிவித்ததாவது, இது நாட்டின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு பிரச்சாரம் ஆகும். இதற்கு முன்பு CHAS அட்டைதாரர்கள், ஒரு நாளில் S$38 வரை வாங்கும்போது 3% தள்ளுபடி பெற்றிருந்தனர்.

பல குழந்தைகள் கொண்ட குடும்பங்களை ஆதரிக்கும் அரசின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, FairPrice அறக்கட்டளை கூடுதல் தள்ளுபடியை வழங்குவதாகவும் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு எளிதான அனுபவம் வழங்க, தள்ளுபடி தானாகவே கணக்கிடப்படும் வகையில் ஒரு ஆட்டோ டிஸ்கவுண்ட் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், Pioneer மற்றும் Merdeka தலைமுறை உறுப்பினர்கள் மற்றும் CHAS அட்டைதாரர்கள், FairPrice மொபைல் செயலியில் MyInfo மூலம் ஒருமுறை தகவல் சரிபார்ப்பு செய்தால், அதன்பின் செயலி மூலம் கட்டணம் செலுத்தும் போது தள்ளுபடி தானாகவே கணக்கிடப்படும்.

மே மாத இறுதியில் இருந்து இதுவரை 3.4 லட்சம் NTUC உறுப்பினர்கள் தரவு சரிபார்ப்பை முடித்துள்ளனர் என்று குழு தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan