பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!!

சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் விளக்குகள் (08.11.25) பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டன.
பிரகாசமான விளக்குகள், அழகிய அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது பண்டிகை உணர்வை உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுக்க திரண்டு வந்தனர்.
இந்த ஆண்டு “கிறிஸ்துமஸ் ஆன் எ கிரேட் ஸ்ட்ரீட்” நிகழ்வு “SG60” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் SG60 மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் சின்னமான மெர்லியன் கூறுகள் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.
இரவு 7.50 மணிக்கு நடைபெற்ற விளக்கு ஏற்ற விழாவில் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மற்றும் உள்துறை, சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு இணை அமைச்சர் கோ போ மெங் கலந்து கொண்டனர்.
3.1 கி.மீ நீளமுள்ள ஆர்ச்சர்ட் சாலையில் கோல்டு, ரோஸ் கோல்டு, சில்வர் ஒயிட் நிறங்களில் அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
மேலும், கலைமான் வடிவ முச்சக்கர வண்டி, பெரிய கிறிஸ்துமஸ் மாலை மற்றும் தோ பயோ டிராகன் விளையாட்டு மைதானம் போன்ற நான்கு பெரிய புகைப்பட இடங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நிகழ்வை ஆர்ச்சர்ட் சாலை வணிக சங்கம் மற்றும் சமூக மையம் இணைந்து, எஸ்ஜி கேர்ஸ் கிவிங் வீக்குடன் இணைந்து நடத்தினர். இதன் மூலம் 300க்கும் மேற்பட்ட சமூக சேவை முயற்சிகளுக்காக $9,028,888 நிதி திரட்டப்பட்டது.
விளக்கு விழாவின் போது ஆண்ட்ரே ஆட்டிசம் மையம் மற்றும் டச் கம்யூனிட்டி சர்வீசஸ் இணைந்து தாள வாத்திய நிகழ்ச்சி வழங்கினர்.
மேலும் சமூக சேவை அமைப்புகள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் அரங்குகளும் இடம்பெற்றன.
ஷா ஹவுஸ் மற்றும் ந்ஜீ ஆன் சிட்டியில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் கிராமங்கள் 08.11.25 முதல் 2026 ஜனவரி 4 வரை திறந்திருக்கும்.
“கிஸ்டோபியா கிறிஸ்துமஸ் கார்னிவல்” பகுதியில் அமைந்திருக்கும் சவாரிகளை குழந்தைகள் அனுபவித்து மகிழலாம்.
ந்ஜீ ஆன் நகரில் உள்ள 14 மீட்டர் உயர மாஸ்டர்கார்டு கிறிஸ்துமஸ் மரத்தின் முன், ஒவ்வொரு இரவும் இரவு 8 மணி மற்றும் 9 மணிக்கு பனிப்பொழிவு விளைவு காட்சியிடப்படும்.இது பண்டிகைகால உற்சாகத்தை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
