சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!!

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!!

சீன–ஐரோப்பிய விமானப் பயணக் கூட்டணியின் முன்பதிவு கணினி அமைப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 3.3 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என்ற அபாயம் உருவாகியுள்ளது.

இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) 47,000 யுவான்(S$8650) அபராதம் விதித்துள்ளது.
இந்த சம்பவம் 2023 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்தது. ஒரே மாலையில் மூன்று ஊழியர்களின் அலுவலகக் கணினிகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.

ஆரம்ப கட்டத்தில் வைரஸ், ரான்சம்வேர் அல்லது உள்நாட்டு கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தக் கணினிகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டன.

பின்னர் வெளியான ஆன்லைன் தகவல்களின் அடிப்படையில், மனிதவள விவரங்கள், வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் நிதி தொடர்பான தரவுகள் ஹேக்கர்களால் பெறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நிறுவனம் மேற்கொண்ட உள் விசாரணையில், அனுமதியில்லாத நபர்கள் முன்பதிவு அமைப்பை அணுகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த அணுகல், ரிமோட் டெஸ்க்டாப் புரோட்டோகால் (RDP) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

முன்பதிவு அமைப்பில் இருந்த 3,36,759 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களில் சில கசிந்திருக்கலாம் என்றும் நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால், ஹேக்கர்கள் எந்த விதமான பணம் அல்லது வேறு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PDPC நடத்திய விசாரணையில், நிறுவனத்தின் தரவு பாதுகாப்பில் பல குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. முக்கியமாக, சேவையகங்கள் காலாவதியான இயக்க முறைமையில் இயங்கியதும், நிர்வாகக் கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு முறைகள் பயன்படுத்தப்படாததும் குறிப்பிடப்பட்டது.

நிறுவனம் தனது விளக்கத்தில், அனைத்து தரவும் கசிந்ததாக இல்லை என்றும், பெரும்பாலான தகவல்கள் பழையவை அல்லது நகல்களாக இருந்ததாகவும் கூறியது.

சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.இருப்பினும், தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்ட விதிகள் பலவற்றை நிறுவனம் மீறியுள்ளதாக PDPC முடிவு செய்தது. அதன் காரணமாகவே, அந்த விமானப் பயணக் கூட்டணிக்கு 47,000 யுவான்(S$8,650) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK