யிஷூனில் ஏற்பட்ட தீ விபத்து..!! தீ பற்றிய காரணம் என்ன??
சிங்கப்பூர்: யிஷூன் தெரு 44 இல் உள்ள பிளாக் 475B இல் உள்ள மூன்று மாடி HDB அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (நவம்பர் 5,2025) அதிகாலை 2:25 மணிக்கு ஒரு பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து வெளி வந்தால் புகையை சுவாசித்த 40 பேர் உடனடியாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் மூலமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், புகையை சுவாசித்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போது முதற்கட்ட விசாரணையில், ஒரு குடியிருப்பாளர் அறையில் இருந்த ஒரு கருவியின் மூலமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதுகுறித்து யிஷூன் குழு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மேம்பாடு மற்றும் கல்விக்கான மூத்த நாடாளுமன்ற செயலாளருமான சையத் ஹருன் அல்ஹாப்சி என்பவர் சம்பவத்திற்கு பிறகு சிவில் பாதுகாப்பு படையும் குடியிருப்பாளர்களும் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்த முயற்சியையும், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நான்கு பேரும் சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு ஆதரவளிக்க தன்னால் இயன்ற உதவி அனைத்தையும் செய்வேன் எனவும் உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.