யிஷூன் பகுதியில் உள்ள HDB பிளாட்டில் தீ விபத்து..!!
சிங்கப்பூர்: யிஷூன் தெரு 81, HDB அடுக்குமாடி குடியிருப்பில் பிளாக் 89 இன் இரண்டாவது மாடியில் இன்று (நவம்பர் 12ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தகவல் ஆனது சிவில் பாதுகாப்பு படையினருக்கு காலை 10:10 மணியளவில் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்க தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின் போது, சமையலறையில் கவனிக்கப்படாமல் தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பிரிவில் வசிக்கும் ஒருவருக்கு புகையை சுவாசித்த காரணத்தினால் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடைத்து உடனேயே சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தீ விபத்திற்கு பிறகு பொதுமக்களுக்கு குடிமை தற்காப்பு படையினர் கூறிய அறிவுரை: சமைக்கும்போது அருகில் இருந்து கவனமாக சமையல் வேலையில் ஈடுபட்டவுடன் பிறகு எரிவாயு அல்லது மின்சுகளை அணைத்துவிட்டு பிற வேலைக்குச் செல்ல வேண்டும்.
தீ விபத்து நடந்த பிறகு சமவெளிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினரான லீ வை யிங் சென்று பார்வையிட்டார்.
லீ கூறியது: சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையும் சிங்கப்பூர் காவல் படையும் விரைந்து செயல்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் தீயணைப்பு வீரர்களும் தீயை விரைவாக அனைத்து உள்ளனர் இதனால் அதிக பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறிய இவர் சரியான நேரத்தில் உதவிய அங்குள்ள நகர சபை மற்றும் மக்கள் சங்க சமூக கழக குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் அடிபட்ட தலைவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள் தங்களுடைய ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்திருந்தார்.