முதன் முறை இந்திய பயணம் - பிரதமர் வோங்..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்
சிங்கப்பூரின் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு. லாரன்ஸ் வோங் இன்று (செப்டம்பர் 2 ஆம் தேதி) இந்தியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமராக அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது.
நாளை மறுநாள் செப்டம்பர் (4 – ஆம் தேதி) வரை திரு வோங் இந்தியாவில் இருப்பார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சிங்கப்பூரின் பிரதமர் இந்தியாவின் புது டெல்லி செல்கிறார்.
புதுடில்லியில் அவர் இந்திய பிரதமர் மோடி, இந்திய அதிபர் திரௌபதி முர்மு இருவரின் விருந்து உபசரிப்பிலும் கலந்து கொள்வார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுடில்லியில் உள்ள சிங்கப்பூர் மக்களை சந்தித்து திரு வோங் பேசுவார். இதில் இந்தியா சிங்கப்பூர் உறவின் 60 ஆண்டு நிறைவு சிங்கப்பூரின் 60 ஆம் பிறந்தநாள் ஆகியவற்றை அனுசரிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் பின்னர் இந்திய தொழிலதிபர்களையும் சந்திப்பார் மற்றும் புதுடில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துவார்.
இரண்டு நாட்டு பொருளாதார உழைப்பை விரிவாக்கி, கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை இந்த பயணம் ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் வோங் நாட்டில் இல்லாத போது தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா சண்முகம் தற்காலிக பிரதமராக பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரதமரின் சுற்றுப்பயணத்தில் இவருடன் வெளியுறவு அமைச்சர் விவியின் பாலகிருஷ்ணன், தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் கான் சியோவ் ஹுவாங் உட்பட பலர் இந்தியா சென்றுள்ளனர்.