புலாவ் டெகோங்கில் மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டம்..!!!
சிங்கப்பூர்:புலாவ் டெகோங்கில் மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பை (Floating Solar PV) நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, பாதுகாப்பு அமைச்சகம் பொது பயன்பாட்டு வாரியத்துடன் (PUB) இணைந்து செயல்பட உள்ளது.
இரு தரப்பினரின் கூட்டறிக்கையின் படி, குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக மிதக்கும் சூரிய அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிட, படிப்படியாக ஆய்வானது மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த ஆய்வில் கருத்தியல் வடிவமைப்பு, அதிகபட்ச திறன், விரிவான பொறியியல் வடிவமைப்பு மற்றும் வணிக மாதிரி ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு அமைச்சகம், இராணுவ முகாம்களின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய சூரிய ஆற்றலை விரிவுபடுத்துவதில் உறுதியாக உள்ளது.
ஏற்கனவே, PUB டெங்கே நீர்த்தேக்கத்தில் பெரிய அளவிலான மிதக்கும் சூரிய அமைப்பை நிறுவியுள்ளது. இதேபோல், புலாவ் டெகோங்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால், அது கார்பன் வெளியீட்டை குறைக்கும் முக்கிய முயற்சியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.