KTL குளோபலின் முன்னாள் தலைவருக்கு தண்டனை விதிப்பு..!!
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி KTL குளோபல் இன் முன்னாள் தலைவர் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதன் மூலமாக பத்திரங்கள் மற்றும் எதிர்கால சட்டத்தை மீறி உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது நவம்பர் 5, 2014 முதல் மே 5, 2015 வரை நடந்தது.
சென் கிங் யாவோ குற்றங்களை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையின் போது ஜூன் 20 ஆம் தேதி அன்று மாநில நீதிமன்றங்களால் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்மூலம் வழக்கு விசாரணை நடைபெற்ற போது இவர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு 1.5 மில்லியன் யுவான் கடனை செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அந்த கடனை திரும்ப செலுத்த தவறியதற்காக இறுதியில் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 14ஆம் தேதி நீதிபதி தண்டனை வழங்கிய போது அவர் மற்றொரு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.
குற்றத்தை ஒப்பு கொண்டதற்காக இவருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.