ஃபார்முலா 1 2025 - வரலாற்றுச் சாதனை படைத்தார் லாண்டோ நோரிஸ்..!!
அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் 2025 இறுதி போட்டியில் லாண்டோ நோரிஸ் தன்னுடைய திறமையான ஓட்டத்தால் மூன்றாவது இடத்தைப் பிடித்து,ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். பந்தயத்தை வென்றது மேக்ஸ் வெர்ஸ்டாப்பனாக இருந்தாலும், மொத்த புள்ளிகளில் நோரிஸ் முன்னிலையில் இருந்து சாம்பியனானார்.
நோரிஸ், போட்டியின் தொடக்கத்தில் ஒரு இடத்தை இழந்தபோதிலும், கடுமையான அழுத்தத்தைக் கடந்து அமைதியாக பந்தயத்தை முடித்தார். லெக்லெர்க்கின் தாக்கத்தையும் சமாளித்து, உறுதியான ஓட்டத்தால் தனது இடத்தை தக்க வைத்தார்.
வெர்ஸ்டாப்பன் மற்றும் பியாஸ்ட்ரி இடையே கடுமையான போட்டி நடந்த நிலையில், நோரிஸ் துல்லியமான உத்தியும் நம்பிக்கையான ஓட்டத்தாலும் தன்னை மூன்றாவது இடத்தில் நிலைநிறுத்தினார். இறுதியில், மொத்த புள்ளிகளில் முன்னிலை பெற்ற அவர் சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்தார்.
இந்த வெற்றி மெக்லாரனுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்ததாகும். நோரிஸ் இதை தனது அணிக்கும் ரசிகர்களுக்கும் அர்ப்பணித்து, “இது என் கனவு நனவான தருணம்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.