சிங்கப்பூரில் சமீபத்தில் நிறுவனம்  மூடப்பட்ட நிலையில் ஊழியர்களுக்கு உதவ முன் வரும் நிறுவனம்..!!

சிங்கப்பூரில் சமீபத்தில் நிறுவனம்  மூடப்பட்ட நிலையில் ஊழியர்களுக்கு உதவ முன் வரும் நிறுவனம்..!!

சமீப காலத்தில் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த Twelve Cup Cakes என்ற நிறுவனமானது எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி கடைகளை மூடியது.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது.

இந்த நிறுவனமானது கடந்த மாதம் அக்டோபர் 29 அன்று கடை மூடப்பட்ட நிலையில் சம்பளமும் இல்லாமல், வேலையும் இல்லாமல் திண்டாடும் 80 பணியாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலையை விட்டு நீக்கும் பொழுதும் கடந்த மாத சம்பளத்தையும் அந்த 80 பணியாளர்களுக்கு நிறுவனமானது வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் Makan Minum Workers என்ற நிறுவனம் ஆனது 80 பணியாளர்களுக்கும் உதவ முன்வந்துள்ளது.

ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் $1000 கொடுப்பதற்காக $80,000 நிதி திரட்டும் முயற்சியில் தற்போது Makan நிறுவனமானது ஈடுபட்டு வருகிறது என தெரியவந்துள்ளது.

இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK