எச்சரிக்கை…!! மின்னிலக்க வங்கிகளை குறி வைத்து நடக்கும் மோசடி..!!!

எச்சரிக்கை...!! மின்னிலக்க வங்கிகளை குறி வைத்து நடக்கும் மோசடி..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மின்னிலக்க வங்கிகளை குறிவைத்து மோசடிகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 94 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.இது கடந்த ஆண்டின் 42 வழக்குகளை விட இருமடங்கு அதிகமாகும்.

94 மோசடி சம்பவங்களில் சுமார் 2.5 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி சர்ச்சைகள் தீர்வு நிலையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வழக்குகள் ஆள்மாறாட்டம் மற்றும் நச்சு நிரல்கள் மூலம் தனிநபர் தகவல் திருடப்படுவது வழியாக நடந்துள்ளது.

இந்த மோசடிகளில் Trust Bank, GXS Bank, MariBank, Anext Bank மற்றும் Green Link Digital Bank ஆகிய ஐந்து மின்னிலக்க வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் Trust Bank, GXS Bank, MariBank ஆகியவை சில்லறை வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குகின்றன.Anext Bank மற்றும் Green Link Digital Bank சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்குச் சேவை வழங்குகின்றன.

நிபுணர்கள், “மின்னிலக்க வங்கிகளுக்குக் கிளைகள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆலோசனை பெற முடியாது. அதனால் மோசடியாளர்கள் போலியான செய்திகளின் மூலம் எளிதில் ஏமாற்றுகின்றனர்,” என தெரிவித்தனர்.

மோசடிகளைக் கட்டுப்படுத்த, நிகழ்நேர எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர்கள் எச்சரித்தனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK