சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள்..!!

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள்..!!

சிங்கப்பூர் செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.

சிங்கப்பூர் வேலைக்கு செய்பவர்கள் கட்டாயமாக அங்கு சென்ற பிறகு உங்கள் முழு உடலையும் மெடிக்கல் பரிசோதனை செய்வார்கள் அதில் நீங்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் திரும்பி உங்கள் தாய் நாட்டிற்கு வர வேண்டியது தான்.

குறிப்பாக பரிசோதனையில் முக்கியமான மூன்று சரி பண்ண முடியாத பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.

1. உங்களுடைய காது கேட்கும் திறன்:
உங்களுடைய காது கேட்கும் திறனை கட்டாயமாக சிங்கப்பூரில் பரிசோதனை செய்வார்கள் உங்களுடைய காது இரண்டு மீட்டருக்கு அப்பால் இருந்து பேசினாலும் கேட்கும் திறனுடன் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.

2. உங்களுடைய பார்வை:
இரண்டாவதாக நிச்சயமாக உங்களுடைய பார்வையை பரிசோதனை செய்வார்கள் உங்களுடைய பார்வை நீங்கள் கண்ணாடி போட்டிருந்தாலும் போடாமல் இருந்தாலும் குறைந்தபட்சம் 6/12 இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் நாடு திரும்ப வேண்டியதுதான்.

3. நிறக்குறைபாடு:
நீங்கள் சிங்கப்பூருக்கு எலக்ட்ரிக்கல் வேலைக்கு அல்லது டிரைவர் வேலைக்கோ சென்றால் கட்டாயம் உங்களுடைய நிற குறைபாட்டை பரிசோதனை செய்வார்கள். அப்படி பரிசோதனை செய்யும் பொழுது உங்களுக்கு நிற குறைபாடு இருந்தால் உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK