மேலும் டாக்சி காத்திருக்கும் நேர கட்டணம் ஒவ்வொரு 45 வினாடிகளுக்கும் 26 காசுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண நிர்ணயம் மற்ற டாக்சி கம்பெனிகளை ஒத்திருப்பது தெரிகிறது.
கிரேப் கேப் டாக்சி சேவை கிரேப் ரெண்டல் எனப்படும் வாடகை வாகன சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.
இதில் உள்ள 40 வாகனங்களும் பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கக்கூடிய டொயோட்டா பிரையஸ் வாகனங்களுடன் தனது டாக்ஸி சேவையை தொடங்கும் என ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட்டது.
கிரேப் கேப் டாக்சி சேவை உரிமத்துக்கு விதிக்கப்பட்ட இவன் நிபந்தனைகளின் படி தனது வாகன எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி டாக்சி சேவைக்கான குறைந்தபட்ச வாகன தேவை அடிப்படையில் 800 வாகனங்களை கொண்டிருக்க வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் முதல் சேவைக்கு மேலும் இரண்டு ஹியூண்டாய் கோனா ரக பெட்ரோல் மின்சாரம் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய வாகனத்தை ஈடுபட வைக்க போவதாக கூறியது. இந்த வாகனங்களை இயக்க வியாழக்கிழமை ஜூலை 3 முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.