சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!! Don't Miss it !! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் வாசியுங்கள்!!
இன்று ஜூலை 24 சிங்கப்பூரில் புத்தம் புதிதானா கடலடி அருங்காட்சியகம் (Oceanarium) பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது.
மேலும் இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் எதிர்பார்க்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இதில் கடல் அதிசயங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய கடல் நிலவு ஜெல்லி மீன் முதல் ஆயிரம் கணக்கான அழகான ஜெல்லி மீன் வகைகளை கொண்டிருக்கும் என்றும் இது பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும் என்றும் அருங்காட்சியக அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அருங்காட்சியத்திற்கு வரும் பார்வையாளர்கள் கடல் மலை, திமிங்கல வீழ்ச்சி, திமிங்கல சுற்றுச்சூழல் அமைப்பின் இனப்பெருக்கம் முதலியவற்றையும் கடல் பாதுகாப்பு முறைகளை எடுத்துக்காட்டும் கதைகளையும் காணும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Photo: Singapore Oceanarium,Resort world Sentosa
இதை குறித்து, நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஃபூ ஹையான் இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றிருக்கும் பொழுது “இந்த அருங்காட்சியகமானது நமது நாட்டின் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்”.
எனவே இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஆர்வம் உள்ளவர்கள் கட்டண விவரங்களை பற்றியும் கூடுதல் தகவல்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.