எலுமிச்சை வெள்ளரி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..?? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!!

எலுமிச்சை வெள்ளரி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..?? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!!

எலுமிச்சையும், வெள்ளரிக்காயும் வெவ்வேறு ஆனவை. ஆனால் இரண்டும் இணைந்த பெயரில் இருக்கும் பழம்தான் எலுமிச்சை வெள்ளரி. இது சிறப்புவகை வெள்ளரி பழமாகும். பெயரில் ‘லெமன்’ இருந்தாலும், இது எலுமிச்சை அல்ல. வெள்ளரி வகையைச் சேர்ந்ததுதான்.

 

இதன் வெளிப்புறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சை பழத்தைப் போல தோற்றமளிப்பதால் ‘லெமன் குக்கும்பர்’ என்று பெயர் வந்துள்ளது.

 

இந்த பழத்தின் உள்ளே சாதாரண வெள்ளரிப்பழம் போலவே சதைப்பற்றுள்ள பகுதி இருக்கும்.

இதன் அளவு ஒரு எலுமிச்சை பழம் அல்லது அதைவிட சற்று பெரியதாக இருக்கும். மென்மைத்தன்மை கொண்ட இது இனிமையான வெள்ளரி சுவையை கொண்டது.

 

கசப்புத்தன்மை மிக குறைவாகவே இருக்கும். இதை அப்படியே சாலட்களில் சேர்த்து உண்ணலாம். ஊறுகாய் தயாரித்தும் ருசிக்கலாம். இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் இந்த எலுமிச்சை வெள்ளரி அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதன் முக்கிய நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்:

👉நீரேற்றம் (Hydration): 90% முதல் 96% வரை நீரைக் கொண்டுள்ளதால், கோடைக்காலத்தில் உடலை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது.

 

👉செரிமானம் (Digestion): இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.

👉ஊட்டச்சத்துக்கள் (Nutrients): வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

 

👉எடை இழப்பு (Weight Loss): குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

 

Follow us on : click here 

 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

 

WHATSAPP CHANNEL LINK

 

https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

 

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

 

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

 

Telegram : https://t.me/tamilansg