அரசு தரும் CDC S$300 வவுச்சர்..!!ஆன்லைனில் பெறுவது எப்படி..?

அரசு தரும் CDC S$300 வவுச்சர்..!!ஆன்லைனில் பெறுவது எப்படி..?

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்றிரவு (02.01.26)நிலவரப்படி,600,000க்கும் அதிகமான உள்ளூர் குடும்பங்கள் அரசாங்கம் வழங்கிய $300 சமூக மேம்பாட்டு கவுன்சில் (CDC) அக்கம்பக்க ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங், இந்த தகவலை தனது ஃபேஸ்புக் பதிவின் மூலம் பகிர்ந்தார்.தென்மேற்கு மாவட்டத்தின் மேயராக உள்ள அவர்,வவுச்சர்களைப் பெறுவதில் சிரமம் எதிர்கொள்ளும் குடியிருப்பாளர்கள் தங்களுக்குச் அருகிலுள்ள சமூகக் கிளப்புகள் மற்றும் SG Digital Community Hubs-ஐ அணுகலாம் என்றும் குறிப்பிட்டார்.

அந்த மையங்களில், மாணவர் தன்னார்வலர்கள், SG Digital Office (SDO) தூதர்கள் மற்றும் Silver Infocomm Wellness தூதர்கள், வவுச்சர் கோருதல் தொடர்பான நடைமுறைகளில் குடியிருப்பாளர்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் நேற்று CDC ஷாப்பிங் வவுச்சர்களின் எட்டாவது சுற்று விநியோகத்தை தொடங்கியது. இதன் கீழ், சுமார் 1.36 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் go.gov.sg/cdcv என்ற இணையதளத்தில், குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரின் மூலம் ஆன்லைனில் வவுச்சர்களைக் கோர தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி சுமார் 760,000 குடும்பங்கள் இன்னும் தங்களின் வவுச்சர்களைப் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கம்பக்க CDC ஷாப்பிங் வவுச்சர் திட்டத்தில் பங்கேற்கும் கடைகள் மற்றும் வணிகர்களின் பட்டியலை அறிய, பொதுமக்கள் go.gov.sg/cdcvouchers என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK