சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல்..!! 18 பேர் மீது வழக்கு..!!
சிங்கப்பூர்: கடந்த ஆண்டு(2025) 10.6 லட்சத்திற்கு அதிகமான சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்தது. இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் பத்து விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு உள்ளூர் மின் வணிகத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து 2,358 சட்டவிரோத சுகாதார பொருட்களை அந்த ஆணையம் கண்டுபிடித்து அகற்றி இருக்கிறது.
இது 2023 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட சுமார் 12,500 பொருட்களுடன் ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது. இது தவிர சட்டவிரோதமான சுகாதார பொருட்களை விற்பனை செய்த காரணத்திற்காகவும் அதை விநியோகம் செய்வதற்காகவும் 18 பேர் மீது கடந்த ஆண்டு (2025) வழக்கு தொடரப்பட்டது.
சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று (மார்ச் 24ஆம் தேதி) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சட்டவிரோத சுகாதார பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றுள் பெரும்பாலானவை பாலுணர்வை தூண்டும் மருந்துகள் (19%), மயக்க மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் (17%), இருமல் மருந்துகள் (56%) ஆகும்.
இவை முந்தைய ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுகாதாரப் பொருட்களின் மூன்று முக்கிய வகைகளை உள்ளடக்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்ட விரோத சுகாதாரப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பானது $750,000 அதிகமாக தாண்டி இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அகற்றப்பட்ட சட்டவிரோத சுகாதாரப் பொருட்களின் எண்ணிக்கையானது 2023 இல் 12,474 ஆக இருந்து 2024 இல் 7,190 ஆகவும் அதன் பிறகு கடந்த ஆண்டு (2025) 2,358 ஆகவும் குறைந்து கடந்த மூன்று ஆண்டுகளிலும் ஒரு குறைந்தபட்ச அளவை எட்டியிருக்கிறது என்பது தரவுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மின்னணு வர்த்தக தளங்களும் சமூக ஊடகங்களும் படிப்படியாக முக்கிய சில்லறை விற்பனை வழிகளாக மாறிவரும் சூழலில் சுகாதார அறிவியல் ஆணையம் தனது கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத சுகாதாரப் பொருட்களை மேலும் விரைவாக கண்டுபிடிப்பதற்காக தானியங்கி ரோபோக்கள் போன்ற தொலைநோட்பங்களையும் தற்போது பயன்படுத்தி வருவதை அறிக்கையில் சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கிறது.
சட்டவிரோத சுகாதாரப் பொருட்களை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் கடந்த ஆண்டு (2025) 1,372 முறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக அளவில் அகற்றப்பட்ட பொருட்களில் முடி மற்றும் சரும பராமரிப்பு பொருட்கள், பூஞ்சை எதிர்ப்பு அல்லது வைரஸ் எதிர்ப்பு பொருட்கள், மூக்குவழி உள் இழுப்பான்கள் அல்லது நெபுலைசர்கள் நோயறிதல் பரிசோதனை கருவிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ்கள் ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை செல்லுபடியாக மருந்து சீட்டுடன் மருத்துவர்கள் இடம் இருந்தோ அல்லது மருந்தகங்களில் இருந்தோ வாங்கி மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுபோன்று செய்யவில்லை எனில் கடுமையான உடல் நலம் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டி உள்ளனர்.