சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடி...!!!மலேசிய நபர் கைது..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 31 வயதான மலேசிய நபர் ஒருவர், சிங்கப்பூர் நாணய ஆணையம்(MAS)அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூர் நாணய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறார்.
அவர்மீது நாளை (25.08.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
போலீசார் தெரிவித்ததாவது,இந்த மாதம் 12 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் இருந்து புகார் வந்தது. அதில், அந்த நபர் MAS அதிகாரியாக நடித்து, பணமோசடி விசாரணைக்காக $50,000 ரொக்கத்தை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
முழுமையான விசாரணைக்குப் பிறகு, சிங்கப்பூர் காவல் படையின் மோசடி தடுப்புப் பிரிவு அந்த நபரின் அடையாளத்தை உறுதிசெய்து, இன்று (25.08.25) மீண்டும் நாட்டிற்குள் நுழைந்தபோது அவரைக் கைது செய்தது.
முதற்கட்ட விசாரணையில், அவர் குறைந்தது நான்கு இதே போன்ற மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, அதை தெரியாத நபர்களுக்கு மாற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.