இயந்திர கோளாறு சரி செய்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் முழுமையாக சேவை தடங்களை சரி செய்ய இயலவில்லை. இதனால் சேவை தடங்களை சரி செய்வதற்கு 9 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆனது.
மார்ச் 17ஆம் தேதி மென்பொருள் கோளாறு ஏற்பட்டதை முந்தைய நாளை போலவே அதே பிரச்சனைகள் தொடர்ந்து காரணத்தினால் தடங்களுக்கான காரணங்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் சேவை இடையூறுகளை முன்கூட்டியே விவரமளிக்க தவறியதற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
மார்ச் 18ஆம் தேதி இந்த சேவை கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டபோது சுமார் ஒரு மணி நேரம் மீண்டும் சேவை தடங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் நாட்களில் இதன் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வேளையில் சேவை தடங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சில நாட்களுக்கு சிங்டெல் பயனர்கள் சிக்கல்களை சமாளிக்க வேண்டும் எனவும், சற்று பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று சிங்டெல் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.