எக்ஸ்போ மையத்தில் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்..!!!

எக்ஸ்போ மையத்தில் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சி (PAP) இன்று(09.11.25) எக்ஸ்போ மையத்தில் வருடாந்திர சேவை விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் லிம் ஸ்வீ சேக்கு சிறப்புப் பதக்கம் வழங்கியது.

கட்சியின் தலைவர் லீ சீ செங், லிம் ஸ்வீ சே கட்சியின் அக்கறை,தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பில் முன்னிலை வகித்தவர் என குறிப்பிட்டார்.

அவரது நம்பிக்கை, உற்சாகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகள் கட்சிக்கும் சிங்கப்பூருக்கும் மிக்க மதிப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

இன்று மொத்தம் 426 கட்சி உறுப்பினர்கள் அவர்களது அர்ப்பணிப்புக்காக பாராட்டப்பட்டனர்.

பிரதமர் லாரன்ஸ் வோங் கூறுகையில்,தனது கட்சி புதுப்பித்தல் முயற்சிகளை தொடர்வதாகவும், திறமையுள்ள சிங்கப்பூரர்களை அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் (“5G குழு”) ஆக ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தில் அழைப்பு விடுப்பதாக கூறினார்.

சிறந்த திறமை மற்றும் நேர்மையான குணாதிசயம் கொண்ட அதிகாரிகள் நாட்டிற்கு மிகவும் தேவை என்றும், நாட்டிற்குப் சேவை செய்யத் தயாராக உள்ள திறமையானவர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ளவர்களை கட்சி அழைக்கிறது என்றும் கூறினார்.

பிரதமர் வோங் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும்,மக்களின் நம்பிக்கையை பெறுவதே முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

தற்போதைய அமைச்சரவை பெரும்பாலும் நான்காம் தலைமுறை உறுப்பினர்களை கொண்டுள்ளது.விரைவில் ஐந்தாம் தலைமுறை (“5G”) உறுப்பினர்கள் இணைக்கப்படுவார்கள், மற்றும் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் புதிய 5G குழுவின் தொடக்கம் காணப்படும் என்று கூறினார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK