PSLE தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அப்டேட்..!!!

PSLE தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அப்டேட்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (PSLE) முடிவுகள் அடுத்த செவ்வாய்க்கிழமை (25.11.25) காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் நேரடியாக தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளிக்குச் சென்று முடிவுகளைப் பெற முடியாத மாணவர்கள் தங்களது சார்பில் வேறொருவரை நியமிக்கலாம். அந்த ஏற்பாடுகளை இம்மாதம் 27ஆம் தேதிக்குள் முடிக்கலாம் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுக் கழகமும் (SEAB) தெரிவித்தன.

மாணவர்கள் தங்களது கல்வித் திறன், பலம், மற்றும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு உயர்நிலைப் பள்ளியைத் தேர்வு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். பள்ளித் தெரிவுகளைப் பெற்றோர்கள் இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்கலாம். அதற்காக Singpass தேவைப்படும்.

மாணவர்களுக்கு எந்த உயர்நிலைப் பள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அடுத்த மாதம் டிசம்பர் 18 அல்லது 19ஆம் தேதி அறிவிக்கப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK