அதிகரித்து வரும் மின் சிகரெட் தோட்டா தயாரிப்பு..!!!
சிங்கப்பூர்: 41 வயது நபரான முகமது அகில் அப்துல் ரஹீம் என்பவர் மலேசியாவின் ஜோகூர் பாருவல் ஒரு நபரைச் சந்தித்துள்ளார். ரஹீம் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு “ஜாம்பி சிகரெட் தோட்டாக்கள்” தயாரிக்க அவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
ரஹீம் என்பவர் மொத்தம் 200 தோட்டாக்களை தயாரித்துள்ளார். மின் தோட்டாக்களை பொட்டலத்தில் இருந்து டெலிவரி செய்பவர் எடுத்து விற்க முயலும் போது காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
விசாரணையின் போது மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றதென காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஒரு கெட்டிக்கு $10 சம்பாதித்ததாகவும் வழக்கில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக ஆங்கில செய்தி வலையமைப்பு CNA தெரிவித்துள்ளது. அவர் நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவற்றில் மூன்று சிகரெட்டுகள் தொடர்பான வழக்கு என்றும் ஒன்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தவறான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டு எனவும் கூறப்பட்டது.
மேலும் மற்ற நான்கு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும் போது நீதிபதியால் பரிசீலிக்கப்பட்டவை ஆகும்.
ஜாம்பி சிகரெட் தோட்டாக்கள் தயாரித்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட முதல் உள்ளூர் நபரான 41 வயது ரஹீம் என்பவருக்கு 16 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.