சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..??

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் பெரும்பாலோர், பன்முக கலாச்சாரம் தங்களின் தேசிய அடையாளத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புதிய குடியேறிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்து சிலர் இன்னும் எச்சரிக்கையாக உள்ளனர் என்று சமீபத்திய CNA–IPS கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட 47% சிங்கப்பூரர்கள் கடந்த பத்தாண்டுகளில் தேசிய அடையாளம் வலுப்பெற்றதாக நம்புகின்றனர். ஆனால் 41% பேர் வெளிநாட்டினரின் வருகை சிங்கப்பூர் அடையாளத்தை பாதிக்கக்கூடும் என்றும் கருதுகின்றனர்.

சில நிபுணர்கள் கூறுவதாவது,சிலர் “பன்முக கலாச்சாரம்” என்பதை சீன, மலாய், இந்திய, யூரேசிய சமூகங்களுக்குள் மட்டுப்படுத்தி பார்க்கிறார்கள். இதற்குப் புறம்பானவர்கள் சமூக அமைப்புக்கு வெளியே இருப்பவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். பொருளாதார அழுத்தம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய பயமும், வெளிநாட்டினரை எதிர்மறையாக பார்க்க தூண்டுகிறது.

பல சிங்கப்பூரர்கள், ஒருங்கிணைய முனைவோரை வரவேற்கிறார்கள். ஆனால் உள்ளூர் விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களின் நடத்தை, தேசிய அடையாள உணர்வை பாதிக்கிறது என்று கூறினர்.

மேலும் வலுவான தேசிய அடையாளத்துடன் சேர்ந்து,எல்லோரையும் இணைக்கும் “உள்ளடக்கிய மனப்பான்மை” அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வெளிநாட்டினரும் சிங்கப்பூர் வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாலும், அவர்களின் சொந்த கலாச்சாரத்தை மதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள் தங்கள் தேசிய அடையாளத்தில் பெருமை கொள்கிறார்கள் என்றாலும்,குடியேற்றம் குறித்து இன்னும் கலவையான மனநிலையில் தான் இருக்கின்றனர் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.