கடன் வாங்கியது தவறா?? இப்படியும் மிரட்டலாமா??

கடன் வாங்கியது தவறா?? இப்படியும் மிரட்டலாமா??

சிங்கப்பூரில் கடன் வாங்கியவர்களை கடன் கொடுத்த ஒரு நபர் வித்தியாசமான முறையில் துன்பறுத்தியுள்ளார்.

அக்டோபர் 5-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் பெடோக் நீர்த்தேக்க சாலையில் இருக்கும் ஒரு வெளிப்புறச் சுவரில் “உங்கள் பணத்தை திருப்பித் தரவும்” என்று வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலானது செய்தி குறிப்பில் அக்டோபர்7-ஆம் தேதி அன்று சிங்கப்பூர் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த முதற்கட்ட விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மூலம் சுவருக்கு அருகில் எழுதியதை அடையாளம் கண்டனர்.

தகவல் கிடைத்த 18 மணி நேரத்திற்குள், இந்த சம்பவத்திற்கு காரணமான 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரித்த போது, ஒரு மொபைல் போனும் கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையின் போது இந்த இளைஞர் பல கடன்காரர்களை துன்புறுத்தி வருவதாக ஏற்கனவே வழக்குகள் இருந்தது தெரியவந்தது.

கைது செய்த இளைஞரை இன்று(08/10/2025) நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்த உள்ளார்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இதற்கு $5000 முதல் $50,000 வரை அபராதமும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், இத்துடன் 6 பிரம்படிகளும் வழங்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK