சிங்கப்பூரின் "Complaint Singapore" குழு விற்கப்படுகிறதா..? நிபுணர்கள் எழுப்பும் சந்தேகங்கள்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2.4 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட “Complaint Singapore” என்ற பிரபல உள்ளூர் சமூக ஊடகக் குழு, அதன் நிர்வாக உரிமைகளை விற்கும் திட்டம் சட்ட மற்றும் சமூக ஊடக நிபுணர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.
2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் குழு, சிங்கப்பூரில் பொதுமக்கள் தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தும் தளமாக வளர்ந்துள்ளது. அதிக விலைகள், சமூக விரோத நடத்தை, பொதுப் போக்குவரத்து தாமதங்கள், மோசடி எச்சரிக்கைகள் போன்றவை அடிக்கடி விவாதிக்கப்பட்ட தலைப்புகள்.
இந்த மாதம் 6ஆம் தேதி, குழுவின் நிறுவனர் மற்றும் நிர்வாகி, Facebook, YouTube, Instagram, TikTok, X, Xiaohongshu போன்ற சமூக ஊடகக் கணக்குகள், வலைத்தளம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட மேலாண்மை உரிமைகளை விற்கும் எண்ணத்தை Facebook-இல் பகிர்ந்தார். ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் முன்மொழிவுகளை அனுப்பலாம் என்றும், பக்கங்களை எவ்வாறு நிர்வகிக்கப்போகிறார்கள் என்பதையும் சிங்கப்பூர் டாலர்களில் விலைச் சலுகையுடன் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் அறிவித்தார்.
CNA-வின் விசாரணைக்கு பதிலளித்த குழுவின் ஒரு மேலாளர், தனது பெயரை வெளியிட விரும்பாமல், தற்போது 30 முதல் 40 வயதுக்குட்பட்ட 10 முதல் 15 பேர் குழுவை நிர்வகித்து வருவதாகக் கூறினார். பல சலுகைகள் மற்றும் விசாரணைகள் வந்துள்ளன என்றும், ஆனால் விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், தொழில்நுட்ப மற்றும் ஊடக வல்லுநர்கள், இப்படியான பெரிய சமூகக் குழுவின் உரிமைகள் விற்கப்படுவது பல கேள்விகளை எழுப்புவதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, விளம்பர வருவாய் எவ்வாறு ஈட்டப்படுகிறது.பயனர் தரவு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளதா என்ற கேள்விகளுக்கு விளக்கம் தேவைப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், புதிய உரிமையாளர் குழுவின் நோக்கத்தை மாற்றி, பயனர்களுக்கு அல்லது நாட்டின் சமூக ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைப் பகிர்ந்தால், அதனால் தீங்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
