டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா...???
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஜூலை 31, 2025 அன்று நடைபெற்ற டோட்டோ லாட்டரி டிராவில்,ஒரு அதிர்ஷ்டசாலி S$ 2.31 மில்லியன் பரிசுத் தொகையை வென்று புதிய சாதனையை படைத்துள்ளார்.
இது, சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாதனையை முறியடிக்கும் வகையில், அதிகபட்ச ஒற்றை வெற்றிக்கான புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
வெற்றி எண்கள்: 7, 19, 20, 21, 22, 29 கூடுதல் எண்: 37
முதல் முறையாக, நான்கு தொடர்ச்சியான எண்கள் (19, 20, 21, 22) டிராவில் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியாளர்,Quick pick சாதாரண நுழைவு முறையில்,ஆன்லைனில் பந்தயம் வைத்துள்ளார்.
இதே டிராவில்,இரண்டாம் குழு பரிசுக்காக 20 வெற்றி டிக்கெட்டுகள் இருந்தன.
ஒவ்வொரு டிக்கெட்டும் S$13,140 பரிசு தொகையை வென்றது.
வெற்றியாளர் இல்லாமல் தொடர்ந்து மூன்று டிராக்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை (31 ஆம் தேதி) டோட்டோவின் திரட்டப்பட்ட ஜாக்பாட் மீண்டும் S$1.79 மில்லியன் தாண்டியது.
இதற்கு முன், ஜூன் 19 2026 அன்று S$12.21 மில்லியன் பரிசை ஒரு டிக்கெட் வென்றது.
அதுவே தற்போதைய வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.