சிங்கப்பூர்:சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள், துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனையை நடத்தினர்.
இந்தச் சோதனையில் சுமார் 900 கிலோ கடத்தப்பட்ட மெல்லும் புகையிலையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சம்பவ விவரங்களின்படி,மலேசியாவில் பதிவு பெற்ற ஒரு லாரி வழியாக வந்த சரக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது,அவை அறிவிக்கப்பட்டதிலிருந்து வேறுபட்டது என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து விரிவான சோதனை நடத்தப்பட்டபோது, பாட்டில்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பானங்களில் மறைத்து வைக்கப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவத்தை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரிகள் பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது, இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.