178 வாகனங்களை பறிமுதல் செய்த LTA..!! காரணம் என்ன..??

178 வாகனங்களை பறிமுதல் செய்த LTA..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் கடந்த மாதம் (பிப்ரவரி) நிலப் போக்குவரத்து ஆணையம் அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

அப்போது 477 விதி மீறல்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 178 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்த உள்ளே விவரங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் பேஸ்புக் பதிவில் இன்று (மார்ச் 10) வெளியிட்டது.

சாலைகளில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்கு இது போன்ற விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கியமாக குறைந்தது 16 வயது உடையவர்களாக இருந்தால் மட்டுமே அனைத்து தனிப்பட்ட இயக்க சாதனம் (PMD), மின் பைக் (PAB) மற்றும் சாலைகளில் பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஒரு கோட்பாட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதையும் ஓட்டுனர்களுக்கு LTA நினைவூட்டி உள்ளது.

விதி மீறலில் ஈடுபட்ட வாகனம் ஓட்டுபவர்களை பொதுமக்கள் சாலையில் பார்த்தால் go.gov.sg/report-am என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK