உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!!!
சிங்கப்பூர்: உட்லேண்ட்ஸ் குடிவரவு சோதனைச் சாவடியில் வழக்கமான சோதனையின் போது, அதிகாரிகள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகளை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது.
குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட தகவலின் படி, மோட்டார் சைக்கிளின் கீழ்புறம், முன்புறம் மற்றும் உட்புற பகுதிகளில் சிகரெட்டுப் பெட்டிகள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் வெளியிட்ட வீடியோவில், மொத்தம் 570 பாக்கெட் கடத்தல் சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது.
பொதுமக்களுக்கு அதிகாரிகள், கடத்தல் பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவருவது கடுமையான குற்றமாகும் என்றும், இதற்காக கடும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.