உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!! காரணம்..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!! காரணம்..??

சிங்கப்பூர்:உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனையில் வரி செலுத்தப்படாத சிகரெட் கடத்தல் வழக்கை குடிவரவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்ததாவது,இந்த மாதம் 1 ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது, பெட்டியின் உள்ளே நுணுக்கமாக மாற்றியமைக்கப்பட்ட பகுதியில் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய 44 வயது மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் மாற்றியமைக்கப்பட்ட பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 370 அட்டைப்பெட்டிகள் மற்றும் 1,600 வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் குடிவரவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட வரி ஏய்ப்பு சிகரெட்டுகளும் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருப்பது, வாங்குவது அல்லது விற்பது சட்டவிரோதமானது.இது கடுமையான அபராதம் மற்றும் சிறைத்தண்டனையை ஏற்படுத்தும் என்று சுங்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.