வைரலாகும் வீடியோ..!! சென்டோசாவில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம்..!!
சந்திர புத்தாண்டின் முதல் நாளில் சென்டோசா கடற்கரையில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம் குறித்த வீடியோ பதிவை ஒரு இணைய பயனர் சமூக ஊடகத்தளமான டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சென்டோசா மேம்பாட்டு கழகத்தை தான் கேட்டபோது, சென்டோசா கடற்கரையில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த காணொளி பதிவானது ஆன்லைனில் பரவி வருவது குறித்து தகவல் எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளனர்.
இந்த வீடியோ பதிவில் கடல் ஆமை நீரில் நீந்துவது பதிவாகியுள்ளது. இந்த கடற்கரையில் கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுவதாக ஏற்கனவே, சென்டோசா மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ குறித்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்ததாவது: காட்டு விலங்குகளை பார்க்கும் போது பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் எனவும் அவற்றை அணுகவோ அல்லது தொந்தரவு செய்யவும் கூடாது எனவும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு கூறியிருந்தனர்.
மீன்பிடித்தல் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அவற்றை வேட்டையாடுதல் போன்ற தொந்தரவு செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாதே என்று கண்டிப்புடன் கூறியுள்ளது. மேலும் இது போன்ற செயல்கள் செய்வது தண்டனைக்குரியது என்று எச்சரித்துள்ளனர்.
இது போன்ற தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிய வந்தால் 1800-RANGERS ஹாட் லைன் (1800-726 4377) நம்பரை அழைத்து புகார் அளிக்கலாம்.