AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்...!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!!
சிங்கப்பூர்:தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது முதல் தென்கிழக்கு ஆசிய ஆராய்ச்சி ஆய்வகத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது.
மைக்ரோசாப்ட் ரிசர்ச் ஆசியா (MSRA) என்று அழைக்கப்படும் இந்த ஆய்வகம், தொழில்துறை மற்றும் தென்கிழக்கு ஆசிய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு மிகவும் திறம்பட பயன்படுத்துவது, சுகாதாரம் போன்ற தொழில்களின் AI திறன்களை மேம்படுத்துவது மற்றும் உள்ளூர் AI திறமையை வளர்ப்பது எப்படி என்பதை ஆராயும்.
மைக்ரோசாப்ட் ரிசர்ச் ஆசியாவின் தொடக்க விழாவிற்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தலைமை தாங்கினார்.
மேலும் மைக்ரோசாப்ட் ரிசர்ச் ஆசியா சிங்கப்பூரில் நுழைவது, உள்நாட்டில் மிகவும் துடிப்பான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அதிக நிறுவனங்களை ஊக்குவிக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் நிறுவியுள்ள ஆராய்ச்சி நிறுவனம், ஆராய்ச்சியாளர்கள், பயன்பாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி திட்ட மேலாளர்கள் போன்ற பதவிகள் உட்பட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்ளூரில் புதிய உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று டான் சீ லெங் கூறினார்.
இது சிங்கப்பூரின் புதுமையான திறமைகளை ஈர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல், மைக்ரோசாப்ட் ரிசர்ச் ஆசியா, முனைவர் பட்ட மாணவர்கள் அதிநவீன ஆராய்ச்சி தொழில்நுட்ப திட்டங்களில் ஈடுபட வழிகாட்ட உள்ளூர் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைத்து வருகிறது.
மேலும் மே மாதத்திலிருந்து உள்ளூர் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இதன் மூலம், சிங்கப்பூர், தெற்காசிய AI ஆராய்ச்சியின் மையமாக மாறும் என நம்பப்படுகிறது.