இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்தி கொடுமை..!!மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் 6 ஆண்டுகள் சிறை..!

இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்தி கொடுமை..!!மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் 6 ஆண்டுகள் சிறை..!

மெல்பர்ன்: இந்தோனீசியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை தனது வீட்டில் அடைத்து வைத்து, பல ஆண்டுகளாக அடிமையாக நடத்தி கொடுமைப்படுத்திய 47 வயது மலேசிய ஆடவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சோங் சீ கிட்டிற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெல்பர்ன் நகர நீதிமன்ற நீதிபதி மைக்கல் கேஹில் இத்தீர்ப்பை வழங்கினார். விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணை சோங் தனது சொந்த உடைமை போன்று கருதி கொடூரமாக நடத்தி வந்தது தெரியவந்தது.

நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, அந்தப் பெண் சிறிதளவு தவறு செய்தாலும் சோங் அவரைத் தாக்கியுள்ளார். முகத்தில் மிதிப்பது, சுவரில் தலையை மோதச் செய்வது போன்ற கொடூரமான செயல்களிலும் அவர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்தப் பெண்ணுக்கு போதுமான உணவு, மருத்துவ வசதி மற்றும் தூக்கம் ஆகியவற்றையும் மறுத்துள்ளார். அவரது சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி, வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சோங் சீ கிட்டிற்கும் இடையே 2015ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே ‘தாய்-மகன்’ போன்ற உறவு உருவாகியதாக கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டு அந்தப் பெண் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளார். பின்னர் சோங் தம்பதியினர் அவரைத் தவிக்கவிட்டு மலேசியாவுக்குச் சென்றதால், அவர் நாடோடியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு சோங் மீண்டும் மெல்பர்ன் திரும்பியுள்ளார். அவரது இரண்டாவது குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்தப் பெண்ணை வீட்டுப் பராமரிப்புப் பணிகளுக்காக தங்களுடன் தங்க வைத்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் வீட்டு வாடகை மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக தனது உறவினர்களிடம் கடன் வாங்குமாறும் சோங் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார்.

2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தப் பெண் இறுதியாக சோங்கின் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே, அவர் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட அடிமைத்தனமும் கொடுமைகளும் வெளிச்சத்துக்கு வந்தன.

ஆஸ்திரேலிய கூட்டாட்சிச் சட்டத்தின்படி ஒருவரை அடிமையாக நடத்துவது மிகவும் கடுமையான குற்றமாகும். இத்தகைய குற்றத்திற்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.