சிங்கப்பூர் வேலைக்கு இன்டர்வியூ செல்லும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறு!!

சிங்கப்பூர் வேலைக்கு இன்டர்வியூ செல்லும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறு!!

சிங்கப்பூர் வேலைக்கு இன்டர்வியூவில் கலந்து கொள்பவர்கள் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்களைப் பற்றி பார்ப்போமா!!

சிங்கப்பூரில் நீங்கள் ஏற்கனவே வேலை பார்த்தவர்களாக இருந்தாலும்,புதிதாக வேலைக்கு செல்பவராக இருந்தாலும் உங்களுடைய முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

ஓர் உதாரணமாக, நீங்கள் சிங்கப்பூரில் இதற்குமுன் வேலை பார்த்தவராக இருந்தால், நீங்கள் வேலை பார்த்த இடத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டிருந்தாலோ அல்லது நீங்கள் ஏதேனும் தவறு செய்து சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அபராதம் செலுத்திருந்தால் போன்ற தகவல்களையும் முன்கூட்டியே ஏஜென்களிடம் தெரிவிக்க வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் வேறொரு கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லும் போது உங்கள் முழு விவரங்களையும் MOM தெரிவித்து விடும். அதனால் நீங்கள் சிங்கப்பூர் செல்வதில் சிக்கல்கள் அதிகமாக இருக்கும்.

வெளிநாட்டு ஊழியர்களை தேர்வு செய்யும் பொழுது கம்பெனிகள் தேர்வு செய்யப்படவுள்ள நபர் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்றால் மட்டுமே அவர்களை தேர்வு செய்யும்.

கம்பெனிகள் MOM இல் உங்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விசாரணை செய்வார்கள். அப்பொழுது உங்களுடைய முழு விவரங்களும் தெளிவாக வந்துவிடும். அடுத்ததாக கம்பெனியில் இருந்து IP வந்தவுடன் நீங்கள் கண்டிப்பாக சிங்கப்பூர் சென்று ஆக வேண்டும். Ip பெற்ற பின்னும் நீங்கள் செல்லாமல் இருந்தால் மீண்டும் வேறொரு வேலைக்கு வேறொரு கம்பெனிக்கு முயற்சி செய்யும் பொழுது அதுவே உங்களுக்கு சிக்கலாக அமையும். உங்களுக்கு தேர்வு செய்வதற்கும் தயக்கம் காட்டுவார்கள்.

அடுத்தது,நீங்கள் எந்த எஜென்ட்களிடம் உங்களுடைய டாக்குமெண்ட்களை கொடுத்தாலும் நீங்கள் முன்கூட்டியே எல்லா விவரங்களையும் தெளிவாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதை போல் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க செல்லும் போது Color Blindness இருப்பதை மறைத்துவிடுகிறார்கள்.ஆனால் அவ்வாறு செய்வது தவறு
.Color Blindness இருப்பதை மறைப்பது சிங்கப்பூர் சட்டப்படி குற்றமாகும்.

அதனால் சிங்கப்பூர் செல்வோர் நேர்மையாக இருங்கள். நீங்கள் மறைப்பது சிறிய விஷயம் என்று அலட்சியமாக இருந்தால், அதுவே உங்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையை கொண்டு வர வாய்ப்புள்ளது.