நூதன முறையில் சிங்கப்பூருக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சிகெரட்டுகள்!! பறிமுதல் செய்த அதிகாரிகள்!!

நூதன முறையில் சிங்கப்பூருக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சிகெரட்டுகள்!! பறிமுதல் செய்த அதிகாரிகள்!!

சுங்கே கடுத் என்ற இடத்தில், சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் மொத்தம் 2,952 சிகரெட் அட்டைப்பெட்டிகளுடன் 4 பேரை ஏப்ரல் 23 தேதியன்று கைது செய்தனர்.

வரி ஏய்ப்பு செய்த சுமார் $319,914 மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு தொழிற்துறை பகுதிக்குள் எரிபொருள் தொட்டியை இழுத்துச் செல்லும் டிரக் ஒன்றை அதிகாரிகள் கண்டனர்.

இரண்டு ஆண்கள் எரிபொருள் தொட்டியில் இருந்து கருப்பு பைகளை அருகில் உள்ள வேனுக்கு மாற்றுவதை அதிகாரிகள் கண்டனர்.

அதிகாரிகள் அந்த பைகளை சோதனை செய்தனர். அதில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருப்பதைக் கண்டனர்.

இதன் தொடர்பாக மூன்று சிங்கப்பூரர்கள், ஒரு மலேசியா டிரக் டிரைவர்
உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டு நபரும்,29 வயதுடைய ஓர் நபரும்,39 வயதுடைய மலேசியாவைச் சேர்ந்த ஓர் நபரும் ஆவர்.

மலேசியாவில் இருந்து டிரைவர் சிகரெட்டுகளை கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சிகரெட் கடத்திய இருவரையும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலம் பணியமர்த்தியது தெரியவந்தது.

சிங்கப்பூர் சுங்கத்துறை சிகரெட்டுகள், வேன், டிரக் மற்றும் எரிபொருள் தொட்டி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.

வரி செலுத்தப்படாத பொருட்களை வாங்குவது, விற்பது, வைத்திருப்பது அல்லது டெலிவரி செய்வது சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமான செயல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதம், ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்படலாம். அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டது.